செயல்படாத சுத்திகரிப்பு நிலையம் ; விரக்தியில் சிவகாசி மக்கள்

சிவகாசி : குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகாசி பிச்சாண்டி தெரு, புதுத் தெரு உள்ளிட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக தன்னிறைவு திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு,அரசு நிதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. திறப்பு விழா பின்பு இதுநாள் வரை செயல்படவில்லை. அரசு நிதியோடு எங்களின் பணமும் வீணாகி விட்டதே என இப்பகுதியினர் கூறுகின்றனர். தற்போது குடிநீரை குடம் 10 ரூபாய் என தனியாரிடம் வாங்குகின்றனர். சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டால் குடம் நீர் ரூ.5 என்பதால் விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

Leave a Comment