டெல்லியில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது: தளர்வுகள் குறித்து கெஜ்ரிவால் அறிவிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று புதிதாக 299 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளால் இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய 4-வது மாநிலமாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டினாலும், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.
‘‘நாங்கள் படிப்படியாக பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையை நோக்கி நகர வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக லாக்டவுன் காலம் பயன்படுத்தப்பட்டது.

20 பயணிகளுடன் ஒற்றைப்படை இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் பேருந்தில் ஏறும்போது, இறங்கும்போது ஸ்கிரீன் செய்யப்படுவார்கள். மேட்ரோ ரெயில்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சினிமா திரையரங்கள், சலூன்கள் திறக்கப்படாது.
டாக்சிஸ் உள்பட நான் டயர்கள் உள்ள வாகனங்கள் இரண்டு பயணிகளுடன் பயணிக்க அனுமதி வழங்கப்படும். இரண்டு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி. கட்டுமான தொழில்கள், லாரிகள் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்’’ என்றார்.

Related posts

Leave a Comment