திறப்பது 10:00; பாதுகாப்போ காலை 6:00 மணி; மனவேதனையில் போலீசார்

ஸ்ரீவில்லிபுத்துார் : டாஸ்மாக் கடைகள் காலை 10:00 மணிக்கு துவங்கும்நிலையில் போலீசார் காலை 6:00 மணி முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் பாதிக்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் தினமும் 500 டோக்கன் வழங்கும் நிலையில் குடிமகன்களால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காலை 10:00 மணிக்கு கடைகள் திறக்கும்நிலையில் காலை 6:00 மணி முதல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தபடுகின்றனர். இதனால் இவர்கள் பாதிக்கின்றனர். இவர்கள் பணி நேரத்தை கடை திறக்கும் 30 நிமிடத்திற்கு முன் மாற்ற எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment