பாழாகுது நீர்வரத்து கால்வாய்கள்; பொறுப்பில்லாத பொதுப்பணித்துறையால் அவதி

விருதுநகர் : விருதுநகரில் பொதுப்பணித்துறையின் பொறுப்பற்ற செயலால் நீர்வரத்து கால்வாய்களை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி , புதர்மண்டி பாழாகின்றன. இவற்றை சீரமைத்து தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த கண்மாய் குடிமராமத்து பணிகள் குறிப்பிட்ட சில கண்மாய்களில் மட்டுமே முறையாக நடந்துள்ளது. பெரும்பாலான கண்மாய்களில் முறையாக நடக்கவில்லை. நகர்ப்புற, ஊரக பகுதி கண்மாய்களுக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் பல பராமரிப்பின்றி பாழாகிறது. விருதுநகரில் பர்மா காலனி, வேலுச்சாமி நகர், பாண்டியன் நகர் பகுதி நீர்வரத்து கால்வாய்கள் கழிவுநீர் ஓடையாக மாறி உள்ளது. இதன் வழிகளில் கால்வாய் வழித்தடங்கள் குறுகி புதர்மண்டி காணப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்படும். இதை தடுக்க கால்வாய்களை சீரமைத்து தடுப்பணை கட்ட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

Related posts

Leave a Comment