மலைவாழ் மக்களுக்கு நிவாரண உதவி- அமைச்சர் வழங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கு அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறி உணவு வகைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் யானை, குதிரை, குரங்கு உள்பட விலங்குகளுக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உணவு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவிற்கு அனைத்து வகை பழங்கள் மற்றும் காய்கறி உணவு வகைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் வனபகுதிக்கு செல்லும் வழியில் குதிரை, பசு மாடுகளுக்கு பழ வகைகளை அமைச்சர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நூற்றுக் கணக்கான குரங்குகளுக்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி வாழைப் பழங்கள் வழங்கினார். மலைவாழ் பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் 37 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், போர்வையை வழங்கினார்.

ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் குருசாமி, கூட்டுறவு சங்க பால்வளத்துறை தலைவர் வனராஜ், நகர பேரவை செயலாளர் வக்கீல் முருகேசன், சிவகாசி நகர செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் பரமசிவன்,

நடிகர் பிரபாத், ஏர் போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் கதிரவன், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் ராமராஜ், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜ், சேத்தூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பட்டு ராஜன், நடிகர் வி.கே.விஜயகுமார், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், இளைஞரணி தங்கப்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment