மாத்திரைகளை எழுதி கொடுங்க; அலட்சியத்தால் நோயாளிகள் தவிப்பு

சிவகாசி : அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் என கவர்களில் எழுதி கொடுக்காததால் பலரும் பாதிக்கின்றனர்.

திருத்தங்கல், சிவகாசி அரசு மருத்துவமனை, சுற்றுப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருபவர்களில் 50 சதவீதத்தினர் வயதானவர்களே. இவர்களுக்கு வழங்கும் மாத்திரைகளை மொத்தமாக வழங்கி காலை, பகல், இரவு என வாயால் சொல்லி அனுப்பி விடுகின்றனர். குழப்பத்தில் மாத்திரையை மாற்றி சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உள்ளாகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் காலை, பகல், இரவு சாப்பிடுவதற்கு முன், பின் என தனித்தனி கவர்களின் எழுதி கொடுக்கின்றனர். நோயாளிகளும் குழப்பமுமின்றி சாப்பிடுகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் இந்நிலை இல்லை. இங்கும் மாத்திரைகளை கவர்களில் எழுதி கொடுக்க மருத்துவ துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment