மின்கட்டணம் செலுத்த ஜூன் 6 வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: ஊரடங்கின் காரணமாக மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மின்கட்டணம் செலுத்த ஜூலை மாதம் வரை அவகாசம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடந்த 5ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மே 18க்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Related posts

Leave a Comment