ரூ20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? கமல்ஹாசன் கேள்வி

சென்னை: மத்திய அரசின் ரூ 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கான நேரடி பயன் எவ்வளவு? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். லாக்டவுனால் சரிந்த பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு ரூ20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்தது. இந்த ரூ20 லட்சம் கோடி திட்ட விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5 நாட்களாக விவரித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு மீது அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அரசு. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment