சென்னையில் 552 பேருக்கு கொரோனா – பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று மாவட்ட ரீதியாக கொரோனா பாதிப்பு விவரம்: செங்கல்பட்டு- 22 ; சென்னை- 552; திண்டுக்கல் -1 ; கள்ளக்குறிச்சி-1; காஞ்சிபுரம்- 5; கன்னியாகுமரி- 2; நாகை-1; ராமநாதபுரம்- 2 ராணிப்பேட்டை- 1; தஞ்சாவூர்- 3; தேனி- 1; திருவள்ளூர் 8; தூத்துக்குடி- 1; திருச்சி- 1 ; விமான நிலையம் தனிமை முகாம் 36 இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது. கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Read More

அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன்…? பின்னணி காரணம் இது தான்…!

சென்னை: அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்வது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இன்று அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் பதவிகள் ஒரே நேரத்தில் டம்மியாகி உள்ளன. எதற்காக இந்த அதிரடி நடவடிக்கை, ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன் என்பது பற்றியெல்லாம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம் பேசிய போது அவர் தெரிவித்ததாவது; ”அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி தேவையில்லை என்பது கட்சியினரின் நீண்டகால கோரிக்கை. இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல ஏற்கனவே கலந்துபேசி எடுக்கப்பட்ட முடிவு. கட்சியின் அடித்தளமான கிளைக்கழகத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கிளைச் செயலாளர் பதவி வேறு; ஊராட்சி செயலாளர் பதவி வேறு. ஊராட்சி…

Read More

ஆந்திராவில் ஆக.,3ல் பள்ளிகள் திறப்பு: ஜெகன் அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஆக.,3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன், 4வது முறையாக தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில், ஆக.,3ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 2,489 பேருக்கு தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 பேர் பலியாகி உள்ள நிலையில், 1,621 பேர்…

Read More

சிறந்த தலைவர் மோடி: அமெரிக்க பத்திரிகை புகழாரம்

வாஷிங்டன் : ‘கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்’ என, அமெரிக்க நாளிதழான, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ புகழாரம் சூட்டிஉள்ளது. தி நியூயார்க் டைம்ஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15.16 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பலி எண்ணிக்கை, 90 ஆயிரத்தை நெருங்குகிறது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கு உதவும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மாத்திரைகளை அனுப்பி வைத்தார்.இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ், பிரதமர் மோடியை புகழ்ந்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நெருக்கடியான காலத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை விட, பிரதமர் மோடி, வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்.வைரசால் ஏற்படும் பெரும் பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட்டால், பிரதமர் மோடி, மிக வலுவான தலைவராக உருவெடுப்பார்…

Read More

ஜூன் 15க்குள் நிலைமை சீராகிவிடுமா: ஸ்டாலின் கேள்வி

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, ஜூன் 15க்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., உடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர், ஜூன் 1ல் துவங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக…

Read More

ஜூன் 15 முதல் 25 வரை பத்தாம் வகுப்பு தேர்வு: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வுடன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: ஜூன் 1ல் துவங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும். பல தரப்பிலும் இருந்து வந்த…

Read More

IRCTC புதிய விதி கட்டாயம்! இல்லைனா டிக்கெட் முன்பதிவுக்கு அனுமதியில்லை!

இந்திய ரயில்வே இயக்கும் ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் “தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை” பற்றி விளக்கத்தை அறிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில நிபந்தனைகளைக் கட்டாயமாக்கியுள்ளது. IRCTC புதிய விதி ராஜ்தானி வகை சிறப்பு ரயில்களுக்கும், சரியான நேரத்தில் இயக்கப்படக்கூடிய பிற ரயில்களுக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளும், தாங்கள் போகும் மாநிலங்களின் “தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை” பற்றி அறிந்திருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இனிமேல், அத்தகைய பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவிற்கு புதிய கட்டாய விதி இரயில் பயணம் மேற்கொள்ளும் அணைத்து பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்ட நெறிமுறை பற்றி கட்டாயம் அறிந்திருப்பதை முதலில்…

Read More

எச்சிலுக்கு தடை… வியர்வை ஓகே… ஐசிசி கமிட்டியின் முடிவு… முன்னாள் வீரர்கள் கண்டனம்

டெல்லி: உலகெங்கும் கொரோனா தலைவிரித்தாடுவதால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது, எச்சிலை வைத்து பந்தை ஷைன் ஆக்குவதற்கு தடை விதிக்க அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக நடந்த வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கின்போது பல்வேறு முடிவுகளையும் அனில் கும்ப்ளே தலைமையிலான கமிட்டி எடுத்தது. அதன்படி அனைத்து சர்வதேச போட்டிகளிலும் மீண்டும் 2 “நான் நியூட்ரல்” அம்பயர்களை அறிமுகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அதேசமயம், வியர்வையால் பந்தை பாலிஷ் செய்வதைத் தடுக்க வேண்டியதில்லை என்ற முடிவையும் அனில் கும்ப்ளே கமிட்டி எடுத்துள்ளது. இருப்பினும் போட்டியின்போதும் போட்டிக்கு வெளியிலும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பேண வேண்டிய சுகாதார முறைகள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தது. கும்ப்ளே கமிட்டி முடிவு இதுதொடர்பாக கும்ப்ளே கூறுகையில், நாம் இப்போது அசாதாரணமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இப்போது எடுக்கப்பட்டுள்ள…

Read More

எதிரணியை வெளுத்துக்கட்ட தயாராகும் ரொனால்டோ… நாளை முதல் பயிற்சி

பிட்மான்ட் : கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் ரத்து செய்யப்பட்ட கால்பந்தாட்ட தொடர் வரும் ஜூன் 13ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்தர அணிகள் தங்களது கால்பந்தாட்ட பயிற்சிகளை திங்கள் முதல் துவங்கலாம் என்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்த 2 மாதங்களாக மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 5ம் தேதி இத்தாலி திரும்பியுள்ளார். ஒத்திவைக்கப்பட்ட கால்பந்தாட்டம் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் கால்பந்தாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் கால்பந்தாட்ட வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கினர். கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஹீரோவாக உள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மதெய்ராவில் உள்ள தன்னுடைய வீட்டில் முடங்கியிருந்தார். பிரதமர் அறிவிப்பு இந்நிலையில் முதல்தர அணிகள் திங்கட்கிழமை…

Read More

சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 வரை இலவச உணவு.. தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் மே 31 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கின் போது ஏழைமக்கள் உணவில்லாமல் தவித்ததை அடுத்து அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 45 நாட்களாக இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மட்டுமே எந்த தளர்வுகளும் இல்லை. மற்ற 25 மாவட்டங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகங்களில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. டிடிவி தினகரனும் அம்மா…

Read More