அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன்…? பின்னணி காரணம் இது தான்…!

சென்னை: அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பொறுப்புகளை ரத்து செய்வது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்த ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இன்று அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளனர். அனைத்து ஊராட்சிக் கழக செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரின் பதவிகள் ஒரே நேரத்தில் டம்மியாகி உள்ளன. எதற்காக இந்த அதிரடி நடவடிக்கை, ஊராட்சி செயலாளர் பதவி ரத்து ஏன் என்பது பற்றியெல்லாம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமியிடம் பேசிய போது அவர் தெரிவித்ததாவது;

”அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவி தேவையில்லை என்பது கட்சியினரின் நீண்டகால கோரிக்கை. இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல ஏற்கனவே கலந்துபேசி எடுக்கப்பட்ட முடிவு. கட்சியின் அடித்தளமான கிளைக்கழகத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கிளைச் செயலாளர் பதவி வேறு; ஊராட்சி செயலாளர் பதவி வேறு.

ஊராட்சி கழகச் செயலாளர் என்பது இடையில் புதிதாக கொண்டுவரப்பட்ட பொறுப்பு. இது ஒன்றியச் செயலாளர்களுக்கும், கிளைச் செயலாளர்களுக்கும் இடையேயான கம்யூனிகேஷனை குறைத்ததாக கருதினோம். ஊராட்சி செயலாளர் பொறுப்பு கொண்டு வந்தது முதல் ஒன்றியச் செயலாளர்கள் கிளைச் செயலாளர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதாக தகவல் வந்தது.

Related posts

Leave a Comment