ஆந்திராவில் ஆக.,3ல் பள்ளிகள் திறப்பு: ஜெகன் அறிவிப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் ஆக.,3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன், 4வது முறையாக தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மே 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திராவில், ஆக.,3ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்து இன்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், வணிக வளாகங்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் திறக்க தடை தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 2,489 பேருக்கு தற்போது வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 52 பேர் பலியாகி உள்ள நிலையில், 1,621 பேர் சிகிச்சைக்குப்பின் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

Related posts

Leave a Comment