சிறந்த தலைவர் மோடி: அமெரிக்க பத்திரிகை புகழாரம்

வாஷிங்டன் : ‘கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்’ என, அமெரிக்க நாளிதழான, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ புகழாரம் சூட்டிஉள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15.16 லட்சத்தை தாண்டியிருக்கிறது. பலி எண்ணிக்கை, 90 ஆயிரத்தை நெருங்குகிறது. இதற்கிடையே, அமெரிக்காவுக்கு உதவும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மாத்திரைகளை அனுப்பி வைத்தார்.இந்நிலையில், அமெரிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ், பிரதமர் மோடியை புகழ்ந்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த நெருக்கடியான காலத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை விட, பிரதமர் மோடி, வெற்றிகரமான தலைவராக திகழ்கிறார்.
வைரசால் ஏற்படும் பெரும் பாதிப்பில் இருந்து இந்தியா விடுபட்டால், பிரதமர் மோடி, மிக வலுவான தலைவராக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. இவரின் புகழ் உயர்ந்துகொண்டே வருகிறது.


ஒன்றிணைந்துமோடி, எதேச்சதிகார போக்கு கொண்டவரல்ல; அனைவரையும் அரவணைத்து செல்பவர். அதனால் தான், ஊரடங்கு காலத்தில், பிரதமர் மோடி வெளியிடும் வழிமுறைகளை, கோடிக்கக்கணக்கான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.பிரதமர் மோடி, கொரோனா வைரசை குறைத்து மதிப்பிடவில்லை. நோயின் பரவலைத் தடுக்க, கொள்கை வேறுபாடுகளை மறந்து, அனைத்து மாநில அரசுகளுடனும், ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறார். கிட்டத்தட்ட, 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை, மிகக் குறைந்து காணப்படுவதற்கு, முக்கிய காரணமாக, பிரதமர் மோடி திகழ்கிறார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இக்கட்டுரையில், புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல படும் துயரங்களும், உ.பி.,யில் ஏற்பட்ட லாரி விபத்து பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment