சென்னையில் 552 பேருக்கு கொரோனா – பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் இன்று மாவட்ட ரீதியாக கொரோனா பாதிப்பு விவரம்: செங்கல்பட்டு- 22 ; சென்னை- 552; திண்டுக்கல் -1 ; கள்ளக்குறிச்சி-1; காஞ்சிபுரம்- 5; கன்னியாகுமரி- 2; நாகை-1; ராமநாதபுரம்- 2 ராணிப்பேட்டை- 1; தஞ்சாவூர்- 3; தேனி- 1; திருவள்ளூர் 8; தூத்துக்குடி- 1; திருச்சி- 1 ; விமான நிலையம் தனிமை முகாம் 36 இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Related posts

Leave a Comment