ஜூன் 15 முதல் 25 வரை பத்தாம் வகுப்பு தேர்வு: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும் என தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வுடன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: ஜூன் 1ல் துவங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும். பல தரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 15,690 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதி வழங்கப்படும். மாணவர்களின் வசதிக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் 5 கி.மீ., சுற்றளவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

Related posts

Leave a Comment