உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுத்தலைவராகப் பொறுப்பேற்க உள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் திரு.ஹர்ஷ் வர்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Read MoreDay: May 20, 2020
# temple open
ஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு.!! மகிழ்ச்சியில் பக்தர்கள்.!… # temple open
Read More8 அம்மா உணவகங்களில் இலவச உணவு- செலவு தொகையை வழங்கியது அதிமுக
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவுக்கான செலவு தொகையை அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், தினக்கூலி பணியாளர்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் உணவின்றி கஷ்டப்படாமல் இருக்க அனைத்து நகராட்சிகளிலும் செயல்பட்டுவரும் 8 அம்மா உணவகங்களில் 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த 8 அம்மா உணவகங்களில் 23.4.2020 முதல் 3.5.2020 வரை 11 நாட்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்குவதற்காக செலவுத் தொகை நாளொன்றுக்கு ரூ.78 ஆயிரம் வீதம் 11 நாட்களுக்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 8 அம்மா உணவகங்களிலும் 3 வேளைகளில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது…
Read Moreஎதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் – சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ’எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது. எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில் இன்னும் அதிக வாய்ப்புகள் வரவில்லையே என்ற நிராசை இருந்தது. ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் எனது வயதுக்கு ஏற்ற படங்களைத்தான் அப்போது செய்து இருக்கிறேன் என்பது புரிகிறது. கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே எனது முத்திரையை பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தை பெற முடிந்தது. எதற்கும் பொறுமை வேண்டும். அப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது”.
Read Moreஅவர்களின் வேலை நமக்கு ஒர்க்கவுட் – கதிர்
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கதிர், அவர்களின் வேலை நமக்கு ஒர்க்கவுட் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் கதிர். இவர் நடித்த கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக பரியேறும் பெருமாள் படத்தில் இவரது நடிப்புக்காக விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில் நடிகர் கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் மண்வெட்டியை வைத்து மண் அள்ளிப்போடும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், விவசாயிகளின் அன்றாட வேலைதான், சிட்டி வாழ்க்கையில் ஒர்க் அவுட்டாம். என்ன சொல்றது போங்க…’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார். கதிரின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Read Moreதமிழகத்திற்கு ரூ.295 கோடி உள்ளாட்சி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு நிதியாக தமிழகத்திற்கு 295 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை:ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கி உள்ள நிலையில், மத்திய அரசு 20 லட்சம் கோடிக்கான பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள், ரூ.20 கோடிக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், 10 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதேபோல் தகுதியான குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் முத்ரா திட்டத்தில் கடன்பெறும் ஆர்வம் உள்ளவர்களுக்கு…
Read Moreகொரோனா தடுப்பு பணிக்காக 3 மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு
கொரோனா தடுப்பு பணிக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளாக உதயச்சந்திரன், அன்பு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு – உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., டி.எஸ். அன்பு ஐ.பி.எஸ். திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், வனிதா ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் – பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., வனிதா ஐ.பி.எஸ். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்பிரமணியன், பவானீஸ்வரி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் – சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., பவானீஸ்வரி ஐ.பி.எஸ்
Read Moreதமிழகத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை:தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 இருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது . அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்…
Read Moreடெல்லியில் இருந்து திரும்பிய 172 பேர் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்
டெல்லியில் இருந்து திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 172 பேர் சிவகாசி அருகே உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கி கூலித்தொழில் செய்து வந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். பின்னர் அவர்கள் தமிழகம் திரும்ப அரசு எடுத்த நடவடிக்கையால் டெல்லியில் வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயிலில் தமிழகம் வந்தனர். இதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 158 ஆண்கள், 12 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 172 பேர் விருதுநகர் வந்தடைந்தன
Read Moreவறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி- சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ வழங்கினார்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வறுமையில் இருக்கும் செண்பகத்தோப்பு மழை வாழ்மக்கள், மம்சாபுரம் சலவை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்தையா, மம்சாபுரம் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் மற்றும் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.
Read More