எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் – சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, ’எனது சினிமா பயணத்தில் எந்த நேரத்தில் எது நடக்க வேண்டுமோ அதுதான் நடந்தது என்று சொல்லலாம். நாம் நினைத்தது எல்லாம் உடனே நடந்து விடாது.

எதற்கும் ஒரு நேரம் வர வேண்டும். சினிமாவுக்கு வந்த புதிதில் இன்னும் அதிக வாய்ப்புகள் வரவில்லையே என்ற நிராசை இருந்தது. ஆனால் இப்போது திரும்பி பார்த்தால் எனது வயதுக்கு ஏற்ற படங்களைத்தான் அப்போது செய்து இருக்கிறேன் என்பது புரிகிறது.

கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டே எனது முத்திரையை பதிக்க முயற்சி செய்தேன். அதனால்தான் தனி அடையாளத்தை பெற முடிந்தது. எதற்கும் பொறுமை வேண்டும். அப்போது ஆவேசப்பட்டாலும் இப்போது சினிமாவில் எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது”.

Related posts

Leave a Comment