தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 743 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 448 ஆக இருந்தது.மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்திருந்தனர். ஆனாலும், மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 84 இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது .

அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 743 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 882 ஆக உயர்ந்துள்ளது. 
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Leave a Comment