மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ இதுவே காரணம் – கம்பீர் புகழாரம்

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடருக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர்களின் ஆதரவும் பெருமளவில் பெருகியதால் வருடாவருடம் ஐபிஎல் தொடருக்கான வரவேற்பு அதிகரித்து. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மாறியது.

இந்நிலையில் இந்த ஆண்டு பதிமூன்றாவது சீசனாக ஐ.பி.எல் நடைபெற இருந்த இந்தத்தொடர் தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தொடரானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத இரு அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் திகழ்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதற்கடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மீண்டும் இவ்விரு அணிகளுக்கும் இடையே மிகப் பலமான போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் தற்போது ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் அக்டோபர் மாதம் நடைபெற திட்டமிடப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியின் ரகசியம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மும்பை அணியை பொறுத்தவரையில் உணர்ச்சி வசமாக முடிவுகளை எடுப்பதில்லை. விளையாட்டுக்குத் தேவையான எதார்த்தமான முடிவுகளை மட்டுமே அவர்கள் எடுக்கிறார்கள். கடினமான முடிவுகள் எடுக்கும்போது அதில் உணர்ச்சிக்கு இடமே இல்லை மேலும் பாண்டிங்கிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்ததாக இருந்தாலும் சரி, ஹர்டிக் பண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா போன்ற வீரர்களை தேர்வு செய்வதாக இருந்தாலும் சரி கச்சிதமாக செய்கின்றனர்.

அவர்கள்தான் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வெளியே மிக வலிமையான அணியாக உள்ளது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மோதி மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பாக அதே போன்று தோனி தலைமையிலான புனே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி 2017 ஆம் ஆண்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றவர் மும்பை அணி அதன் பின்னர் ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டாக மாறி மாறி ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment