வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு அரிசி- சந்திரபிரபா முத்தையா எம்எல்ஏ வழங்கினார்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வறுமையில் இருக்கும் செண்பகத்தோப்பு மழை வாழ்மக்கள், மம்சாபுரம் சலவை தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலவள வங்கி தலைவர் முத்தையா, மம்சாபுரம் பேரூராட்சி அ.தி.மு.க. செயலாளர் அய்யனார் மற்றும் அரசு அதிகாரிகள், நிர்வாகிகள் உடன் இருந்தனர். பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனர்.

Related posts

Leave a Comment