8 அம்மா உணவகங்களில் இலவச உணவு- செலவு தொகையை வழங்கியது அதிமுக

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவுக்கான செலவு தொகையை அதிமுக சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் முழு அடைப்பின் காரணமாக ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், தினக்கூலி பணியாளர்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் உணவின்றி கஷ்டப்படாமல் இருக்க அனைத்து நகராட்சிகளிலும் செயல்பட்டுவரும் 8 அம்மா உணவகங்களில் 3 வேளைகளிலும் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த 8 அம்மா உணவகங்களில் 23.4.2020 முதல் 3.5.2020 வரை 11 நாட்களுக்கு 3 வேளைகளிலும் உணவு வழங்குவதற்காக செலவுத் தொகை நாளொன்றுக்கு ரூ.78 ஆயிரம் வீதம் 11 நாட்களுக்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 8 அம்மா உணவகங்களிலும் 3 வேளைகளில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முழு அடைப்பு மே 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் 18.5.2020 முதல் 31.5 2020 வரை 14 நாட்களுக்கு மூன்று வேளைகளிலும் அம்மா உணவகங்களில் உணவு வழங்குவதற்கான செலவு தொகை நாளொன்றுக்கு ரூ.78 ஆயிரம் வீதம் 14 நாட்களுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 92 ஆயிரத்தை விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் வழங்கினார்.

மொத்தம் இதுவரை 23.4..2020 முதல் 31.5..2020 வரை 31 நாட்களுக்கு 8 அம்மா உணவகங்களில் 3 வேளைகளிலும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணனிடம் வழங்கி உள்ளார்.

நிதி வழங்கும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.பாபு ராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி வேண்டு ராயபுரம் சுப்பிரமணியன் திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், விருதுநகர் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், விருதுநகர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் ஒன்றிய குழு தலைவர் சுமதிராஜசேகர், மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், விருதுநகர் நகர செயலாளர் முகம்மது நெய்னார், ஸ்ரீவில்லிபுத்தூர் இளைஞரணி செயலாளர் மான்ராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் மச்சராஜா மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பலராம், சிவகாசி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், இளைஞரணி தங்கபாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment