World News

வாஷிங்டன் : உலகில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மே 21 ம் தேதி காலை நிலவரப்படி 50,82,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 லட்சத்துக்கு அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்

Read More

உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.

விமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000 வரை கட்டணம் சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல ரூ 3,500 முதல் ரூ10,000 வரை கட்டணம். சென்னையில் இருந்து கவுஹாத்தி வரை செல்ல ரூ5,500 முதல் ரூ15,700 வரை கட்டணம். கோவை- டெல்லி செல்ல ரூ 6,500 முதல் ரூ18,600 வரை கட்டணம் நிர்ணயம்.

Read More

ஆம்பன் புயல் பாதிப்பு… பாதிக்கப்பட்டவர்களை கடவுள் காப்பாற்றுவார்… விராட் கோலி

கொல்கத்தா : ஆம்பன் புயலால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம், ஒடிசா பாதிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடே அசாதாரணமான சூழலில் உள்ளது. இந்நிலையில், மேலும் துயரம் கொடுக்கும் நிகழ்வாக ஆம்பன் புயல் தலைவிரித்தாடுகிறது. இதுவரை இல்லாத அளவில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மிகப்பெரிய பாதிப்பை இந்த புயல் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோரிக்கை இந்த புயல் இதுவரை இல்லாத அளவில் மேற்குவங்கத்தை அதிகமாக பாதித்துள்ளதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 12 பேர்…

Read More

#CoronaUpdate #MyPincode #StaySafeStayHome #Isolation

ராஜபாளையம் பத்மா மருத்துவமனை அருகே எம்ஜிஆர் சிலை பின்புறம் உள்ள லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்த மும்பையிலிருந்து வந்த காளிராஜ் என்ற நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அந்தத் தெரு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது

Read More

Rajapalayam News

இராஜபாளையம் அய்யனார் கோவில் மலைவாழ் மக்களுக்கு இந்திய மருத்துவ சங்கம் இராஜபாளையம் கிளை சார்பில் நிவாரணப்பொருள் 15-05-2020 அன்று வழங்கும்போது பழங்குடியின குழந்தைகளைப்பார்த்த உடனே புத்தாடை வழங்கலாமா என்றார் டாக்டர் சாந்திலால் அவர்கள். நிச்சயமாக செய்யலாமென்றபோது தனது நண்பரிடம் சொல்லி உதவித்தொகை பெற்றுச்செய்வோம் அப்படியில்லையெனில் நானே செய்கிறேன் என்றார். முதல் புகைப்படத்திலுள்ள டாக்டரின் நண்பர் டாக்டர் திரு. குமார் அவர்கள் இச்செயல்பாட்டிற்காக ரூ. 15000/-(பதினைந்தாயிரம்)பகிர்வு அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். நேற்று 39 குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் கொள்முதல் செய்து இன்று(21-05-2020) பகிர்வு அறக்கட்டளை சார்பில் 14பேர் சென்று வழங்கிவந்தோம்.

Read More

Sivakasi News

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணபேரி கிராமத்தில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.V.#விவேகன்ராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்

Read More

திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமியின் பதவி பறிப்பு

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வி.பி. துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார். திமுகவில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் எனவும் அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடப்பதாகவும் வி.பி. துரைசாமி கூறினார்.

Read More

2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்

ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் மட்டும் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுடெல்லி:ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத 200 ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களின் பட்டியல்  வெளியிடப்பட்டு, இணையதள டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்கள் பலர் இணையதளம் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதனால் விறுவிறுவென டிக்கெட்டுகள் காலியாகின.முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை ரெயில்வே…

Read More