சி.பி.எஸ்.இ., தேர்வு அட்டவணை வெளியீடு

சி.பி.எஸ்.இ., தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளை மீண்டும் நடத்த, தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் நடந்தன. கொரோனா பிரச்னை காரணமாக, சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து, சி.பி.எஸ்.இ., புதிய முடிவு எடுத்தது. 

அதன்படி, தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என்றும், விருப்பப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படாது என்றும், அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்காத, டில்லியின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள், ஏற்கனவே முடிந்து விட்டன. அதேநேரத்தில், நாடு முழுதும் உள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் பாக்கி உள்ளன. அவற்றுக்கும் தேர்வு அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. 

உடல் நலம்

அட்டவணையை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். தேர்வு எழுத வரும்போது, மாணவர்கள் ஒவ்வொருவரும், சானிடைசர் கிருமி நாசினி பாட்டில் ஒன்றை, தங்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தேர்வு எழுத உள்ள மாணவர்கள், நல்ல உடல் நலத்துடன் இருந்தால் மட்டுமே, தேர்வுக்கு அனுப்ப வேண்டும் என, பெற்றோர் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை

தேதி (ஜூலை) – பாடம் 

1 – மனை அறிவியல் 

2 – ஹிந்தி 

7 – தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் 

9 – வணிக படிப்புகள் 

10 – உயிரி தொழில்நுட்பம் 

11 – புவியியல் 

13 – சமூகவியல்

Related posts

Leave a Comment