திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமியின் பதவி பறிப்பு

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை:

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக வி.பி. துரைசாமி கூறுகையில்,

பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறினார்.

திமுகவில் எனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளனர் எனவும் அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு ஸ்டாலின் நடப்பதாகவும் வி.பி. துரைசாமி கூறினார்.

Related posts

Leave a Comment