விஜய்யை விடாமல் துரத்தும் ராஷ்மிகா

தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் பிரபலமாக இருக்கும் நடிகை ராஷ்மிகா விஜய்யை விடாமல் துரத்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. 
ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை. பேட்டி கொடுக்கும் போது எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் ஹீரோ தளபதி விஜய் என்கிறார். மேலும் ட்விட்டரில் யாராவது உங்களுக்கு பிடித்த கோலிவுட் நடிகர் யார் என்று கேட்டால், விஜய் பெயரை சொல்லிவிடுகிறார். 
இந்நிலையில் லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ராஷ்மிகா ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் எது என்று கேட்டார். உடனே ராஷ்மிகா விஜய்யின் கில்லி படம் என்றார். 
இதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் இது பொய். ராஷ்மிகாவுக்கு விஜய் படத்தில் நடிக்க வேண்டும். அதற்காக இப்படி பொய் சொல்கிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள். 

Related posts

Leave a Comment