இதையும் கவனியுங்க ரோட்டோர பாலங்களில் சேதமான தடுப்பு சுவர் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயம்

சிவகாசி:மாவட்டத்தில் நகர் மற்றும் கிராம பகுதிகளில் ரோட்டோர பாலங்களில் சேதமடைந்த தடுப்பு சுவரினை சீரமைக்க வேண்டும் . தடுப்பு சுவர் இல்லாத பாலம் குறித்து அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்து அபாயமும் உள்ளது.

நகர் , கிராம பகுதிகளில் ஊருக்குள்ளும், வெளிப்பகுதிகளில் கால்வாய் செல்லும் பகுதி ரோட்டில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தடுப்பு சுவர் இருந்தால்தான் டூ வீலர் மற்றும் கார் , பஸ் உள்ளிட்ட வானங்கள் கவனமாக செல்ல முடியும். ஏதேனும் விபத்து ஏற்பட்டாலும் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி வாகனங்கள் நின்று விட வாய்ப்புள்ளது. வாகனத்தில் வருபவர்கள் காயங்களோடு தப்புவர்.

தடுப்பு சுவர் இல்லையென்றால் வாகனங்கள் அதிக ஆழத்தில் கால்வாய்க்குள் விழ வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் ரோட்டின் வளைவில் உள்ள பாலங்களில் தடுப்பு சுவர் இல்லை. சற்றுஅசந்தால் அசம்பாவிதம் ஏற்படும். சில பாலங்களில் தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது. இவற்றை உடனடியாக சீரமைப்பதோடு தடுப்பு சுவர் இல்லாத பாலங்களில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். இல்லையேல் அதற்குரிய குறியீடுகளுடன் அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Related posts

Leave a Comment