இளைஞர் விருதுக்கு அழைப்பு

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: சமூக வளர்ச்சிக்கு சேவைபுரியும் இளைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

15 முதல் 35 வயது வரையிலான தலா 3 ஆண்கள், பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டிற்கான விருதுக்கு 2019 ஏப். 1 முதல் 2020 மார்ச் 31 வரையிலான சேவைகள் பரிசீலிக்கப்படும். www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம், என கேட்டுள்ளார்.

Related posts

Leave a Comment