கழிவு நீரான கோயில் தெப்பம்: அலட்சியத்தில் அறநிலைய அதிகாரிகள்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பம் பராமரிப்பு இன்றி கழிவு நீர் குளமாக மாறி வருவதை சீராக்க அறநிலைய துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர்.

இத்தெப்பத்தில் முன்பு ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்து தெப்பத்தை சுற்றிய பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்தது.நாளடைவில் பராமரிக்காமல் போனதால் நீர்வரத்து கால்வாய் அடைப்பட்டு மழை நீர் வர வழியின்றி போனது.

தற்போது கழிவுகள் கொட்டப்பட்டு தெப்பமும் கழிவு நீர் குளமாக மாறி விட்டது. இரவு நேரங்களில் தெப்பம் படிகட்டுகள் குடிமகன்கள் பார் ஆக உள்ளது. காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து செல்கின்றனர். அரசமரத்து பிள்ளையார் கோயில் பகுதியில் தடுப்பு சுவர் இன்றி உள்ளது.

Related posts

Leave a Comment