கையில் விலங்குடன் ஐஸ்வர்யா ராஜேஷ்.. க.பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய்சேதுபதி!

சென்னை: இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் க.பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய்சேதுபதி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளை டீசர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகி வரும் கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

கையில் விலங்கு

கையில் விலங்குடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு கெஸ்ட் ரோல் தான், முழு படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் தாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கல் காம்போ

தென்மேற்கு பருவக் காற்று, ரம்மி, தர்மதுரை, திருடன் போலீஸ், செக்கச் சிவந்த வானம், பண்ணையாரும் பத்மினியும், இடம் பொருள் ஏவல் என பல படங்களில் விஜய்சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ளார். “கூடமேல கூடவச்சி கூடலூரு போற புள்ள”, “ஆண்டிப்பட்டி” என இவர்கள் நடிப்பில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரல் தான்.

பெண்களுக்கு பிடிக்கும்

கணவன் – மனைவி பிரச்சனைகளும், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்கு போராடும் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் விருமாண்டி சொன்ன கதை பிடித்துப் போகவே, விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தனர். லாக்டவுனுக்கு பிறகு இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வரும் நிலையில், க.பெ.ரணசிங்கம் படத்தின் போஸ்டர் ரிலீசுக்கு, விஜய்சேதுபதி ரசிகர்களுடன் இணைந்து விஜய் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய்சேதுபதியை சுற்றிய சர்ச்சைகளுக்கு எதிராகவும் விஜய் ரசிகர்கள் ஆதரவு அளித்திருந்தனர்.

Related posts

Leave a Comment