விருதுநகர் பாழாகும் கிணறு

விருதுநகர்:விருதுநகர் கணேஷ்நகரில் அமைந்துள்ள நகராட்சி கிணறு பயன்பாடின்றி பாழாகி வருகிறது.

இந்நகரில் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் அமைந்துள்ள இக்கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பொது சுகாதார வளாகங்கள், குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கு வழங்கப் பட்டு வந்தது. முதல் 5 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட இக்கிணறு தற்போது பயன்பாடின்றி உள்ளது. கிணற்றின் நீராதாரத்தை முறையாக பயன்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

பிற மாவட்ட நீராதாரங்களை நம்பும் நகராட்சி நிர்வாகம் உள்ளூர் ஆதாரங்களை பராமரிக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் நுழைவு வாயில் திறந்து கிடப்பதால் அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து குளித்து செல்கின்றனர். இரவில் குடிமகன்கள் பாராகவும் மாறுகிறது. நகராட்சி நிர்வாகம் இதை துார்வாரினால் குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம்

Related posts

Leave a Comment