#OndrinaivomVaa Rajapalayam News

இராஜபாளையம் தொகுதியில் தனியார் பைனான்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் பெற்ற மகளிர் குழுக்களை வட்டிகளையும் மாதந்திர தவணைகளையும் உடனடியாக கட்ட வேண்டும் என வலியுறுத்துவதாக இராஜபாளையம் திருவள்ளுவர் தெரு குழு – 1 லிருந்து பொன்களஞ்சியம் என்ற மகளிர் MLA அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதை அடுத்து இராஜபாளையம் நகரில் உள்ள ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் கிளை நிறுவனத்திற்கு நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று 22.05.2020 நேரில் சென்று மேலாளர் ப்ரித்விராஜ் அவர்களிடம் வட்டியை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ஆணையிட்டுள்ளது அதன்படி கடன் பெற்ற நபர்களுக்கு வட்டியை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதுவரையில் பொதுமக்களை வட்டியை செலுத்த வற்புறுத்தக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார் அதற்கு மேலாளர் அவர்களும் வட்டியை செலுத்த விரும்பும் பொதுமக்கள் மட்டுமே வட்டியை செலுத்தலாம் எனவும் யாரையும் வற்புறுத்தி வட்டியை வசூல் செய்வதில்லை என உறுதி அளித்தார் மேலும் இராஜபாளையம் தொகுதியில் ஊரடங்கால் பொதுமக்கள் வியாபாரிகள் தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் வேலையின்றி தொழில்கள் இன்றி மிகவும் சிரமப்படும் இந்நேரத்தில் தனியார் நிதி நிறுவனம் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற பொதுமக்களை வட்டியை மாதந்திர தவணைகளையும் கட்ட வற்புறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் மேலும் MLA அவர்கள் கூறுகையில் திமுக தலைவர் அன்பு தளபதியார் ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய பொதுமக்கள் நலன் கருதி வட்டியையும் மாதந்திர தவணைகளையும் செலுத்த மேலும் கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார் அதன் அடிப்படையில் அதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வரலாம் எனவும் மேலும் 6 மாதத்திற்கு பிறகு உரிய வட்டிகளை தள்ளுபடி செய்யவும் ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை வைப்பார் எனவும் தள்ளுபடி செய்யவில்லை எனில் ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும் வட்டிகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பார் கூறினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் அவர்கள் நகர துணை செயலாளர் சரவணன் அவர்கள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இக்சாஸ் மகளிர் அணி செல்வராணி கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment