திருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்

திருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம் 15 தேதிக்கு பிறகு அனைத்து தரிசனங்களும் கொரோனா முன்னெச்சரிக்கைக்காக நிறுத்தப்பட்டன. ஏழுமலையானை தரிசனம் செய்து 64 நாட்கள் ஆன நிலையில் பெரும்பாலான பக்தர்கள் இ உண்டியல் காணிக்கைகள் மூலம் செலுத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவின் பல பகுதிகளிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் முன் வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 13 தேவஸ்தான மாவட்ட மையங்களில் லட்டு விற்பனை வரும் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. லாக்டவுன் காரணமாக லட்டு விலையை ரூ 50-இல் இருந்து ரூ 25-க்கு தேவஸ்தானம் குறைத்துள்ளது. ஏழுமலையான தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும் என தேவஸ்தான் தெரிவித்துள்ளது.…

Read More

எங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!

மும்பை : இந்திய அணி வீரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுனில் இருந்த நிலையில், முதன் முறையாக இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார். பிசிசிஐ கடந்த சில நாட்களாக வீரர்களை பயிற்சி செய்ய வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வைக்க தயார் ஆகி வரும் நிலையில் இது முதல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்க தொடர் ரத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடக்க வேண்டிய ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. லாக்டவுன் இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் லாக்டவுனில் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். கடந்த இரு மாதமாக யாரும் பயிற்சி செய்ய வெளியே…

Read More

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்டோக்கள் ஓடின

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இன்று முதல் ஓடின. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உலகைப் புரட்டிப்போட்ட கொரோனா மக்களிடம் உயிர் பீதியை மட்டுமல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் பீதியை ஏற்படுத்தி விட்டது என்பது மிகையல்ல. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிப்பை சந்தித்தனர். இந்தியாவில் மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ஆட்டோக்கள் ஓடவும், சலூன் கடைகள் திறக்கவும் மட்டும் அனுமதி வழங்கப்படாததால் அந்த தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மட்டும் சோகத்தில் இருந்து வந்தனர். தாங்களும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை…

Read More

கவர்னராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு- ஜனாதிபதி, பிரதமருக்கு கிரண்பேடி நன்றி

புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 22.5.2016 அன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து புதுச்சேரி வந்து 29.5.2016 அன்று கவர்னராக அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முந்தைய தினமே புதுச்சேரி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அன்றைய தினம் முதல் தற்போது வரை அவரது செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில், புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

Read More

ramzan in tamilnadu 2020

தமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார். உலகம் முழுக்க ரமலான் மாதம் என்பதால் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகிறார்கள். கடந்த மாதம் தொடங்கிய நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதில் சூரிய உதிப்பதற்கு முன் சாப்பிட வேண்டும், அதன்பின் நோன்பு இருக்க வேண்டும், மீண்டும் சூரியன் மறைந்த பின்தான் நோன்பை துறக்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும். இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் இதை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்கள். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதை முறையாக கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையில் ரமலான் பண்டிகை குறித்த முக்கிய அறிவிப்பை…

Read More

மீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்

நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிட இருக்கிறது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. அதையடுத்து சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. தற்போது, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும். இதுதொடர்பான அறிக்கையை அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் ஏற்கனவே வந்தது. விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது. இந்நிலையில், கடந்தமுறை தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நம்ம அணியாக வெற்றி பெற்றதை தொடந்து இப்போது நடக்கவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் அதே அணி சார்ந்தவர்களுடன் களம் இறங்க விஷால் அணி முடிவு எடுத்துள்ளார்கள்.

Read More

வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த ஷெரின்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷெரின் வருங்கால கணவர் பற்றி மனம் திறந்த பேசியிருக்கிறார். தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். இதையடுத்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஷெரினிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு, ”திருமணம் செய்ய, நம் வாழ்வில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அப்படியான ஒருவர் இப்போது என் வாழ்க்கையில் இல்லை. அதுவும் இல்லாம நாம இப்போ ஊரடங்குல இருக்கோம், நான் வீட்டுக்குள்ளே, வர போற என் இளவரசருக்காக காத்துட்டு இருக்கேன்” என்று கூறியுள்ளார்.

Read More

விஜய் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாக ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். சினிமாத்துறையில் நடிகை என்பதையும் தாண்டி பாடகி, பாடலாசிரியர்,  டப்பிங் ஆர்ட்டிஸ்ட் எனப் பல முகங்கள் ஆண்ட்ரியாவுக்கு உண்டு. விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது: முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடிச்சேன். இந்தப் படத்துல இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. `வெறித்தனம்’ பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா’னு என்னைக் கலாய்ச்சார். விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்’ செம ஹிட். அதே மாதிரி `மாஸ்டர்’லயும் வாய்ப்பு கிடைக்கும்னு உங்களை மாதிரியே நானும் எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா

மதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்தது. விருதுநகர்: மும்பை, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து மதுரை வந்த 33 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் மதுரை தனிச்சியம் பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆண், 29 வயது பெண், திருமங்கலம் அருகே உள்ள தங்களசேரி பகுதியைச் சேர்ந்த 52 வயது ஆண், உசிலம்பட்டி அருகே உள்ள மூப்புபட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், 43 வயது பெண், 21 வயது பெண், 18 வயது பெண், விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த 47 வயது பெண், 20 வயது பெண். உசிலம்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், விக்கிரமங்கலம் இரவாப்பட்டி பகுதியைச் சேர்ந்த 34…

Read More

கொரோனா பாதிப்பு

🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 759 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More