‘அம்மா’ உணவகங்களில் கொரோனா தடுப்பு மருந்து ; அமைச்சர், ஜெயகுமார்,

சென்னை : சென்னை, ராயபுரம் மண்டலத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, ‘அம்மா’ உணவகங்களில், அனைத்து மக்களுக்கும், ஹோமியோ மாத்திரைகள் வழங்க, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார், தன் சொந்த செலவில் ஏற்பாடு செய்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா நோய் தொற்றுக்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி, உலகெங்கும் நடந்து வருகிறது.இந்நிலையில், நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க, ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்து உள்ளது.’ஆர்சனிக் ஆல்பம்- 30′ என்பது, அந்த மருந்தின் பெயர்; இது, மாத்திரை வடிவில் உள்ளது. இது, 200 ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளது. இம்மருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.இதை உட்கொண்டால், கொரோனா வைரஸ் நம்மை தாக்காது. இம்மருந்தை, மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்துள்ளன.

7 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள், காலை வெறும் வயிற்றில், நான்கு மாத்திரைகளை, வாயில் சப்பி சாப்பிட வேண்டும்; முழுங்கக் கூடாது. அரை மணி நேரம் கழித்து தான், வேறு எதுவும்சாப்பிட வேண்டும். இதுபோல், மூன்று நாட்கள்தொடர்ந்து, காலையில் சாப்பிட வேண்டும்.ராயபுரம் மண்டலத்தில், கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, பொது மக்கள் நன்மை கருதி, இம்மாத்திரைகளை ராயபுரத்தில் உள்ள, 12 அம்மா உணவகங்களில், என் சொந்த செலவில் வழங்குகிறேன். மக்கள், இந்த மருந்தை கேட்டு வாங்கி உட்கொள்ளவும். கொரோனா நோயில் இருந்து, உங்களை காத்துக் கொள்ளவும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment