வைரலாகும் போட்டோ, வீடியோ.. இதற்காகத்தான் மருத்துவமனை சென்றார்களா நடிகர் அஜித்குமாரும், ஷாலினியும்?

சென்னை: நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

ஹூமா குரேஸி

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க்கும் இந்தப் படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

சேஸிங் காட்சி

வில்லன்களாக, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ‘100’ படத்தில் நடித்த ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கின்றனர். ‘இதன் 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் கட்டப் படப்பிடிப்பைத் தவிர முழு படப்பிடிப்பும் சென்னையில் நடக்கிறது. சேஸிங் காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டிருந்தோம். இப்போது அதை கேன்சல் செய்திருக்கிறோம்’ என்று படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தது.

மாஸ்க் அணிந்து

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் மாஸ்க் அணிந்து மருத்துவமனைக்குள் இருப்பதால் அவர்கள் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது.

பரிசோதனை

இதுபற்றி அஜித் தரப்பில் விசாரித்தபோது, ‘அஜித்குமாருக்கு இதற்கு முன் ஆபரேஷன் நடந்திருக்கிறது. அதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர் மருத்துவமனையில் பரிசோதனை கொள்வது வழக்கம். அதற்காகத்தான் அவர் நேற்றும் மருத்துவமனை சென்றார். வேறொன்றும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment