முன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை!

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 103 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று.

இன்று வரை சென்னையில் 9989 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 15512 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழகம் கொரோனா நிலை

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா காரணமாக ஐந்து பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 103 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இன்று தமிழகத்தில் பலியான எல்லோரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதுதான் சோகம். சென்னையில் இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் இன்று பலியான நபர்கள் எல்லோரும் வயதானவர்கள்.

என்ன ஒற்றுமை

இவர்கள் எல்லோருக்கும் முக்கியமான பல ஒற்றுமைகள் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் 50 வயதுக்கும் அதிகமானவர்கள். அதன்படி சென்னையை சேர்ந்த 67 வயது நபர் கடந்த 20ம் தேதி பலியானார். அவருக்கு இன்றுதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு கிட்னியில் பிரச்சனை இருந்துள்ளது. அதேபோல் அவருக்கு சுவாசிப்பதில் பல வருடங்களாக சிக்கல் இருந்துள்ளது.

பெண் பலி

அதேபோல் நேற்று சென்னையில் நேற்று 75 வயது நிரம்பிய பெண் ஒருவர் பலியானார் . அவருக்கு மூளையில் பிரச்சனை ஏற்படும் senile dementia என்ற குறைபாடு இருந்துள்ளது. அதேபோல் இவருக்கு மூச்சு விடுவதிலும் குறைபாடு இருந்துள்ளது. மேலும் சென்னையில் நேற்று ஒருவர் கொரோனா காரணமாக பலியானார். இவருக்கு 65 வயது ஆகிறது.

மூச்சு விடுவதில் சிக்கல்

அவருக்கும் இன்றுதான் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு ஹைபர் டென்ஷன் மற்றும் சர்க்கரை வியாதி ஏற்பட்டுள்ளது.அதேபோல் நேற்று சென்னையை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் பலியானார். அவருக்கும் சர்க்கரை வியாதி இருந்துள்ளது. மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவர் பலியானார். மேலும் சென்னையில் இன்று 53 வயது நபர் ஒருவர் பலியானார். அவருக்கும் ஹைப்பர் டென்ஷன் இருந்துள்ளது.

என்ன காரணம்

இவர்கள் எல்லோருக்கும் உடலில் பிரச்சனை இருந்துள்ளது. இதுதான் மிக முக்கியமாக இவர்கள் கொரோனா காரணமாக பலியாக காரணம் ஆகும். அதேபோல் இவர்கள் வயதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். பொதுவாக கொரோனா வரும் நபர்களுக்கு வேறு நோய்கள் இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிக கடினம் ஆகும். இதனால்தான் இவர்கள் தற்போது பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

முன்பே பலியாகிவிட்டனர்

மேலும் இவர்கள் 5 பேரில் 4 பேருக்கு பலியான பின்தான் கொரோனா இருப்பதே கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கொரோனா வந்ததே தெரியாமல் இவர்கள் பலியாகி உள்ளனர். இவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறி ஏற்படவில்லை. இவர்கள் கடைசி நேரத்தில்தான் அறிகுறி தென்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னையில் இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related posts

Leave a Comment