Rajapalayam Thangappandian MLA

இராஜபாளையம் தொகுதியில் தனியார் நிதி நிறுவனம் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற மகளிர் குழுக்களையும் பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொழிலதிபர்களையும் மாதந்திர தவணைகளையும் வட்டியையும் கட்ட வற்புறுத்துவதை தடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று 23.05.2020 மாலை 5 மணி அளவில் நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பேசிய MLA அவர்கள் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பொதுமக்கள் வட்டியை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் பொதுமக்களையும் மகளிர் குழுக்களையும் மாதாந்திர தவணையும் வட்டியையும் கட்ட சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர் இதனால் பொதுமக்கள் மனவேதனை அடையும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர் ஆகவே தாங்கள் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியும் அவர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் மேல்நிலை கல்விக்கு மட்டும் கல்வி கடன் வழங்குவது போல் LKG முதல் 5 ம் வகுப்பு வரை படிக்க வைக்க பெற்றோர்களுக்கு மகளிர் குழுக்கள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அல்லது கல்வி கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வட்டியை செலுத்த வற்புறுத்தும் நிதி நிறுவனங்கள் மீது காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி கட்டணம் குறித்து தலைமை செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை MLA அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனு குறித்து கூறிய போது வெளியில் உள்ளதால் உதவியாளரிடம் மனுவை கொடுக்கவும் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment