எங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்!

மும்பை : இந்திய அணி வீரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுனில் இருந்த நிலையில், முதன் முறையாக இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளார்.

பிசிசிஐ கடந்த சில நாட்களாக வீரர்களை பயிற்சி செய்ய வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வைக்க தயார் ஆகி வரும் நிலையில் இது முதல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்க தொடர் ரத்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடக்க வேண்டிய ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது.

லாக்டவுன்

இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் லாக்டவுனில் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தனர். கடந்த இரு மாதமாக யாரும் பயிற்சி செய்ய வெளியே வரவில்லை. கடுமையான லாக்டவுன் விதிகளும் அதற்கு ஒரு முக்கிய காரணம்.

விளையாட்டுப் பயிற்சிக்கு அனுமதி

மூன்று லாக்டவுன்கள் முடிந்து நான்காவது லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஒன்றாக தனிப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதனால், கிரிக்கெட் வீரர்கள் தனித் தனியாக பயிற்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டது.

மும்பையில் சிக்கல்

பால்கர் மாவட்டம் சிவப்பு மண்டலம் அல்ல என்பதால் அங்கே விளையாட்டுப் பயிற்சிகள் செய்ய அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மும்பை நகரில் இருப்பதால் இப்போதைக்கு பயிற்சி செய்ய முடியாது என கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment