இந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணித்தனர்: 630 விமானங்கள் ரத்து

இந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இன்று 532 விமானங்கள் இயக்கம்இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் இன்று உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. மேற்கு வங்காள மாநிலம் இன்று விமான சேவையை தொடங்கவில்லை. மகாராஷ்டிரா விமானம் 50 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.இன்று நாடு முழுவதும் 532 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் 39,231 பேர் பயணித்தனர் என்று மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.பல்வேறு காரணங்களால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் விமான நிலையம் வந்த பிறகே விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் மிகுந்த கோபம் அடைந்தனர். ஆந்திர பிரதேச மாநிலம் நாளை முதல் விமான சேவைக்கு அனுமதி அளித்தள்ளது. மேற்கு வங்காளத்தில்…

Read More

வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது.. நடிகர் சூர்யா காயம்.. பயப்பட ஒண்ணுமில்லையாம்!

சென்னை: பிரபல நடிகர் சூர்யா, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காயமடைந்தார். நடிகர் சூர்யா இப்போது ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ளார். இது ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற விமானியாக சூர்யா நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, ஹீரோயினாக நடித்துள்ளார். மோகன்பாபு துரோகி, இறுதிச் சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு, பல வருடங்களுக்கு பிறகு தமிழில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். விமானத்தில் ஷூட்டிங் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. விமானம் தொடர்பான கதை…

Read More

#Virudhunagar #szsocialmedia1

குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். #Virudhunagar #szsocialmedia1#TNPolice #TruthAloneTriumphs

Read More

ரசிகர்கள்தான் விளையாட்டுகளின் தீப்பொறி…: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி

மும்பை: ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் ரசிகர்கள்தான் தீப்பொறியாக இருந்து ஆட்டத்தில் உற்சாகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றனர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா தெரிவித்தார். லாலிகா கால்பந்து தொடரின் செய்தி தொடர்பாளருடன் சமூக ஊடகம் ஒன்றில் ரோகித் உரையாடினார். ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது குறித்து அவர் கூறியதாவது: எந்த ஒரு விளையாட்டுக்கும் மிக முக்கியமானவர்கள், எந்த ஒரு விளையாட்டையும் கவர்ச்சியாக மாற்றுபவர்கள், எல்லோரையும் ஈர்க்கும் வகையில் செய்பவர்கள் ரசிகர்கள்தான். அவர்கள்தான் விளையாட்டில் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் தீப்பொறியாக இருக்கிறார்கள். வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் களத்தில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவதில் ரசிகர்களின் பங்கு மகத்தானது. எனவே விளையாட்டு போட்டிகளைப் பொறுத்தவரை எப்போதும் ரசிகர்கள்தான் முக்கியமானவர்கள். அதே சமயம், தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகமாக உள்ள சூழ்நிலையில் ஒவ்வொருவரின் பாதுகாப்புக்கும்…

Read More

டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்: 28-ம் தேதி வரை கடுமையான வெயில் பதிவாகும் என தேசிய வானிலை மையம் தகவல்

#டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு #ரெட்அலர்ட்: 28-ம் தேதி வரை கடுமையான #வெயில் பதிவாகும் என தேசிய வானிலை மையம் தகவல் டெல்லி: வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பநிலை பதிவாகும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. சாலையில் நடக்க முடியாத நிலையில் கானல் நீர் பரவி உஷ்ண காற்று வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே வட மாநிலங்களில் வரும் 28-ம் தேதி வரை 47 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு கடுமையான வெயில் பதிவாகும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில்  நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை…

Read More

Chennai #Chennaiairport #International

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 9.25 மணிக்கு அபுதாபிக்கு விமானம் இயக்கப்படுகிறது. நாளை காலை 9.25 மணி அளவில் சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அபுதாபி செல்கிறது. சென்னையில் முதல் விமானமாக நாளை காலை 5.05 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அந்தமான் செல்கிறது. சென்னை உள்நாட்டு முனையத்தில் இருந்து மொத்தம் 40 விமானங்கள் இயக்க்கப்பட உள்ளன. Chennai #Chennaiairport #International

Read More