டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்: 28-ம் தேதி வரை கடுமையான வெயில் பதிவாகும் என தேசிய வானிலை மையம் தகவல்

#டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு #ரெட்அலர்ட்: 28-ம் தேதி வரை கடுமையான #வெயில் பதிவாகும் என தேசிய வானிலை மையம் தகவல்

டெல்லி: வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பநிலை பதிவாகும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. சாலையில் நடக்க முடியாத நிலையில் கானல் நீர் பரவி உஷ்ண காற்று வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே வட மாநிலங்களில் வரும் 28-ம் தேதி வரை 47 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு கடுமையான வெயில் பதிவாகும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடகாவில்  நேற்றிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை கொட்டியது. பெங்களூரில் பல இடங்களில் வேரோடு மரங்கள் சாய்ந்தன. மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லாறு அருகே சூறாவளியுடன் கூடிய கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நத்தம் மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

Leave a Comment