ஆன்லைனில் போட்டி தேர்வு வகுப்பு

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்தி குறிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்த மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையம் ஏற்பாடு செய்துள்ளது. ஞாயிறு நீங்கலாக வாரத்தில் அனைத்து நாட்களிலும் நடத்தப்படும்.

மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விரும்புவோர் 86438 62299, 77083 93991 எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வாட்ஸ் ஆப் குரூப்பில் உறுப்பினராக இணைக்கப்படுவர். இவர்கள் அலைபேசியில் Zoom செயலியை பதிவிறக்கம் செய்து பங்கேற்கலாம். tamilnaducareerservices.tn.gov.in இணையத்தில் அனைத்து வித பாடக்குறிப்புகளை பெற்று கொள்ளலாம் என, தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment