அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.. மோடி, ராகுல் ட்விட்டரில் வாழ்த்து

மும்பை : கிரிக்கெட்டின் தொழில்நுட்பங்களை காட்டிலும் மனவளம் குறித்துதான் சச்சின் டெண்டுல்கர் அதிகமாக பேசுவார் என்று இளம்வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய பிரித்வி ஷா, தான் தனது 8 வயதில் சச்சினை முதல்முறை சந்தித்ததாகவும், அதுமுதல் அவர் தனது வழிகாட்டியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தான் அதிகமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சதம்

இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக உள்ளார் பிரித்வி ஷா. இவர் ராஜ்காட்டில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக களமிறங்கி சதமடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

இதையடுத்து இவருக்கு சோதனைக்காலம் ஏற்பட்டது. காயம் காரணமாகவும், ஊக்கமருந்து சோதனைக்காக தடை பெற்றும், சிறிது காலம் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார் பிரித்வி ஷா.

பிரித்வி ஷா பெருமிதம்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசிய பிரித்வி ஷா, சச்சின் டெண்டுல்கர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தான் 8 வயதாக இருந்தபோது சச்சின் டெண்டுல்கரை முதல்முதலாக சந்தித்ததாகவும், அப்போது முதல் அவர் தனது வழிகாட்டியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் பயிற்சி மேற்கொள்ளும்போது, சச்சின் டெண்டுல்கர் தவறாது வந்து அதை பார்ப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தான் சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், அவர் கிரிக்கெட் குறித்த தொழில்நுட்பங்களை காட்டிலும் மனவளம் குறித்துதான் அதிகமாக பேசி ஆலோசனை வழங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment