ஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இப்படி பலியாகும் நபர்கள் பலருக்கும் உடலில் ஏற்கனவே குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் தமிழகத்தில் இன்றுதான் அதிகமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகம் பலி தமிழகத்தில் இப்படி பலியாகும் நபர்கள் பலருக்கும் உடலில் ஏற்கனவே குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஏற்கனவே உடலில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்சன் உள்ள நபர்கள் அதிகமாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பலியாகிறார்கள். அதேபோல் அதிக வயது உள்ளவர்கள் தமிழகத்தில் அதிகமாக பலியாகிறார்கள். இது தொடர்பாக நேற்றே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இது தொடர்பாக…

Read More

தமிழகத்தில் ஆக., 2வது வாரம் பள்ளிகள் திறப்பு?

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 2வது வாரம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஆக., 2வது வாரம் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆக., 2வது வாரத்திலும், 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்., மாதம் திறக்கவும் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் இது…

Read More

அதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்

நடிகை ஜோதிகா, வடக்கிலிருந்து வந்தாலும் அதை கச்சிதமாக செய்துள்ளதாக நடிகை ராதிகா டுவிட்டரில் பாராட்டி உள்ளார். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓர் அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டி‌ஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.  2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம்…

Read More

தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி கேப்டன் பதவியை குறிவைக்கும் டீன் எல்கர்

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு டெஸ்ட் அணிக்கான கேப்டனை தேடிவரும் நிலையில், அதை ஏற்க தயார் என டீன் எல்கர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.ஒயிட்-பால் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயிண்டன் டிக் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், டி காக்கிற்கு அதிகமாக சுமையை கொடுக்க விரும்பவில்லை. அதனால் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கமாட்டோம் என்று தென்ஆப்பிரிக்கா கி்ரிக்கெட் போர்டு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன் என்று தொடக்க பேட்ஸ்மேன் டீல் எல்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டீன் எல்கர் கூறுகையில் ‘‘டெஸ்ட் அணி கேப்டன் பதவி என்பது உண்மையிலேயே எளிதான பயணம் கிடையாது. ஆனால்,…

Read More

ஜப்பானில் பேஸ்பால் லீக் ஜூன் 19-ந்தேதி தொடக்கம்

ஜப்பானில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பேஸ்பால் லீக் ஜூன் 19-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஆண்டுதோறும் பேஸ்பால் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மார்ச் மாதம் 20-ந்தேதி லீக் தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லீக் தள்ளி வைக்கப்பட்டது.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஏப்ரல் மாதத்தில் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு போட்டிகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.இதனால் ஜூன் 19-ந்தேதி ரசிகர்கள் இன்று பேஸ்பால் லீக் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 19-ந்தேதி போட்டிகள் தொடங்கினால், ஜப்பானில் தொடங்கப்படும் முதல் தொழில்முறை போட்டி இதுவாகத்தான் இருக்கும்.

Read More

சிங்கம்பட்டி ராஜா மறைவு – சிவகார்த்திகேயன் இரங்கல்

சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் திர்த்தபதி இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்த டுவிட் செய்துள்ளார். இந்தியாவின் கடைசி முடிசூட்டபட்ட மன்னன் சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ்.முருகதாஸ் திர்த்தபதி (89). உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜமீன்தார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் “சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா.  அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார். “சீமராஜா” என்னும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் “சிங்கம்பட்டி சீமராஜா” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தற்காலிகமானது தான்… அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் – வித்யா பாலன்

தற்காலிகமானது தான்… அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரபல நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதனால் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியிட முன்வந்துள்ளனர். இதனை தியேட்டர் அதிபர்கள் எதிர்க்கின்றனர். இதுகுறித்து வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கொரோனா ஊரடங்கால் படங்களை தியேட்டர்களில் திரையிட முடியாமல் 2 மாதங்களுக்கு மேலாக காத்திருக்கின்றனர். இதனால் புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட சிலர் முன் வந்துள்ளனர். இப்போதுள்ள நிலைமையில் சினிமா படங்களை தியேட்டர்களில் வெளியிட வாய்ப்பே இல்லை. வேறு வழி இல்லாமல்தான் இணையதளத்தில் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலைமையை தியேட்டர் உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தியேட்டர்கள் திறந்ததும் எப்போதும் போலவே நிலைமை மாறி விடும். அப்போது படங்களெல்லாம் தியேட்டர்களுக்கு வரும். தியேட்டர்களில்…

Read More

5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

பெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்டியுள்ளது. பெங்களூரு:ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த உள்நாடு விமான போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பல பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமான போக்குவரத்தையும் பயன்படுத்தியவண்ணம் உள்ளனர்.இதற்கிடையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விஹன் சர்மா என்ற 5 வயது சிறுவன் பெங்களூரில் உள்ள தனது தாயை சந்திக்க முடியாமல் டெல்லியில் சிக்கிக்கொண்டான். தனது மகனை சுமார் 3 மூன்று மாதங்கள் பார்க்க முடியாமல் சர்மாவின் தாயார் மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து, டெல்லியில் இருந்து சர்மாவை பெங்களூரு அழைத்து வர அவனது தாயார் உரிய ஏற்பாடுகளை செய்தார். இதற்காக டெல்லியில்…

Read More