ஏற்கனவே இருந்த பிரச்சனை.. இன்று மட்டும் 9 கொரோனா மரணங்கள்.. விஜயபாஸ்கர் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இப்படி பலியாகும் நபர்கள் பலருக்கும் உடலில் ஏற்கனவே குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்று 646 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் தமிழகத்தில் இன்றுதான் அதிகமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழகம் பலி

தமிழகத்தில் இப்படி பலியாகும் நபர்கள் பலருக்கும் உடலில் ஏற்கனவே குறைபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஏற்கனவே உடலில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்சன் உள்ள நபர்கள் அதிகமாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பலியாகிறார்கள். அதேபோல் அதிக வயது உள்ளவர்கள் தமிழகத்தில் அதிகமாக பலியாகிறார்கள். இது தொடர்பாக நேற்றே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இது தொடர்பாக கருத்து தெரிவித்து இருந்தார்.

விஜயபாஸ்கர் பேட்டி

விஜயபாஸ்கர் தனது பேட்டியில், தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.

வியாதி காரணம்

இப்படி 11 வியாதிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பாதித்தால் அவர்கள் எளிதாக பலியாகிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் சொன்னது போலவே தமிழகத்தில் இன்று பலியான நபர்களுக்கும் இதேபோல் இதற்கு முன்பே உடலில் பிரச்சனை இருந்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 8 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் . இதில் பலருக்கு ஹைப்பர் டென்ஷன், சர்க்கரை வியாதி, சிலருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மரணம் இல்லை

தமிழகத்தில் பொதுவாக நோய் இல்லாத நபர்கள் யாரும் கொரோனா காரணமாக பலியாவது இல்லை. இதற்கு முன்பே வேறு நோய் இல்லாத நபர்கள் யாரும் பெரிதாக கொரோனா காரணமாக பலியாவது இல்லை. தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் மிக வேகமாக குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment