Coronavirus-live-news-updates-highlights

தமிழகத்தில் மேலும் 853 பேருக்கு கொரோனா தொற்று. பாதிப்பு எண்ணிக்கை 18,581 ஆக உயர்வு. சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா தொற்று. பாதிப்பு எண்ணிக்கை 12198 ஆக உயர்வு.

Read More

தமிழகத்திற்கு புதிய பட்ஜெட் தேவை… ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட்ஜெட் உருவிழந்துவிட்டது -மு.க.ஸ்டாலின்

சென்னை: 2020-2021 ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை கொரோனா பேரிடரால் உருவிழந்துள்ளதால் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேடிக்கையாக உள்ளது கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் தமிழக நிநி நிலை அறிக்கை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலைமை இருக்கிறது என்பதை அ.தி.மு.க. அரசோ, அதன் நிதியமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியோ இன்னும் புரிந்து கொள்ளாதது கவலையளிக்கிறது; வேடிக்கையாகவும் இருக்கிறது. வரலாறு காணாத கடன் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, வரலாறு காணாத கடன்” ஆகியவற்றின் கடும் பிடியில்…

Read More

400 பேர் பணிநீக்கம்.. உயர் அதிகாரிகளுக்கு செக் வைத்த காக்னிசென்ட்

இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான காக்னிசென்ட், கடந்த ஒரு வருடமாக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மிகமுக்கியமாக தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியை மும்முரமாக செய்து வருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக புதிய வர்த்தகம் இல்லாமல் ஐடி நிறுவனங்கள் தவித்து வரும் அதே நிலையில், ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது என்ற குறிக்கோளோள் உடன் பெரும் நிறுவனங்கள் உள்ளது. ஆனால் காக்னிசென்ட் இந்த இக்கட்டான சூழ்நிலையில் 400 உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. காக்னிசென்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சக ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. 400 ஊழியர்கள் காக்னிசென்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக Brian Humphries பதவியேற்றிய நாளில் இருந்து ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வரும்…

Read More

ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிவுற்ற நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறைவு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், விழுப்புரம் மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 49 பணி வகைகள்: எழுத்தர், உதவியாளர், மேற்பார்வையாளர் கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு…

Read More

ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை!

ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறைவு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 31ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், ஈரோடு மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 73 பணி : உதவியாளர் கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள்…

Read More

தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பிறந்தநாள்… விராட் கோலி வாழ்த்து

மும்பை : தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் 58வது பிறந்தநாளையொட்டி கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். பலர் நம்பிக்கையோடு செயல்படுவார்கள், ஆனால் சிலரே தைரியமாக செயல்படுவார்கள் என்று கூறியுள்ள விராட் கோலி, தனது பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார். இதேபோல ரவி சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஐசிசி போன்றவையும் டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. ரவி சாஸ்திரி பிறந்தநாள் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது 58வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி பலர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 80 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி, 6,938 ரன்களையும் 280 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அடுத்த ஆண்டுவரை பதவிக்காலம் கடந்த 1985ல்…

Read More

பலாப்பழ விற்பனை மந்தம்

கொரோனா தாக்கம் காரணமாக பலாப்பழ விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் பலா பயிரிட்டு உள்ளனர். தற்போது பலாப்பழ சீசன் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இருந்தும் விற்பனைக்காக பலாப்பழங்கள் வந்து குவிந்துள்ளன. பொதுவாக பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்ததும் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Read More

ராஜபாளையம் அருகே கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு

சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு கிருமி நாசினியை தெளித்தார். பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். ராஜபாளையம்: தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆணைக் கினங்க சாத்தூர் சட்ட மன்றத்தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கிராமங்களான செல்லம்பட்டி, தென்கரை, வடகரை, மற்றும் கொருக்கான்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் கொரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு கிருமி நாசினியை தெளித்தார். பின்னர் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் எடுத்துரைத்தார். பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுமாறு வலியுறுத்தினார். அத்துடன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராஜபளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர்…

Read More