டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் மீண்டும் பயிற்சியை தொடங்கினார்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் பிரபல வீரர் ரபேல் நடால்.


கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. இதனால் நட்சத்திர டென்னிஸ் வீரர் நடால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருந்தார். தற்போது ரசிகர்கள் இல்லாமல் மைதானங்களை திறக்க ஸ்பெயின் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் நடால் மல்லோர்காவில் உள்ள ரபேல் நடால் அகாடமியில் பயிற்சியை தொடங்கியுள்ளார்.


தான் பயிற்சிபெறும் வீடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:-
ஒவ்வொருவருக்கும் வணக்கம். தற்போது நான் ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதற்கு மகிழ்ச்சி. எனக்கு எதிராக குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட முடியும் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. இதுதான் முக்கியமான விஷயம்.

Related posts

Leave a Comment