ரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை!

ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறைவு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 31ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், ஈரோடு மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 73 பணி : உதவியாளர்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை. பொது மற்றும் ஓசி விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment