ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை!

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி முடிவுற்ற நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக நிறைவு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 8ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், விழுப்புரம் மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 49 பணி வகைகள்: எழுத்தர், உதவியாளர், மேற்பார்வையாளர்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை. பொது மற்றும் ஓசி விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.54,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment