தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பிறந்தநாள்… விராட் கோலி வாழ்த்து

மும்பை : தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் 58வது பிறந்தநாளையொட்டி கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பலர் நம்பிக்கையோடு செயல்படுவார்கள், ஆனால் சிலரே தைரியமாக செயல்படுவார்கள் என்று கூறியுள்ள விராட் கோலி, தனது பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார்.

இதேபோல ரவி சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஐசிசி போன்றவையும் டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.

ரவி சாஸ்திரி பிறந்தநாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி தனது 58வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி பலர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 80 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி, 6,938 ரன்களையும் 280 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

அடுத்த ஆண்டுவரை பதவிக்காலம்

கடந்த 1985ல் சாம்பியன் ஆப் தி சாம்பியன் விருதை ரவி சாஸ்திரி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு தலைமை பயிற்சியாளராக இவரது காலம் இரண்டாவது முறையாக மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வரை இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி பாராட்டு

இந்நிலையில் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடிவரும் ரவிசாஸ்திரிக்கு கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். அதிகமானவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள் என்றும் ரவி சாஸ்திரி போன்ற சிலரே தைரியமாக செயல்படுவார்கள் என்றும் பாராட்டு தெரிவித்த விராட் கோலி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment