Sattur Dmk

#👍கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை,

👍மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை,

👍வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,

👍கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

👍தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,

👍பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை,

👍தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை

தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும்,

👉பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும்,

👉நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை,

👉கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை

👏ஆனால் இது அத்தனையும் நடந்தது , அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார்.

👏சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.

👉எந்த உயரிய தொழில்நுட்பமும் தமிழகத்தில்தான் அறிமுகப் படுத்தப்பட்டது,

👉சென்னை ஆட்டோமொபைல் நகரமாக மாற்றப்பட்டது.

👉சமத்துவபுரம் அமைக்கப்பட்டது,

குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது,

👉நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது,

👉காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது.

👉பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை,

👉மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.

💪இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி
ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள்,

💪அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும் அவரை
கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை,
எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள் காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான்.

வாழ்க கலைஞர்♠♥

வளர்க தமிழகம்♠♥

Related posts

Leave a Comment