தரமான படம்.. எமோஷனல்.. த்ரில்லிங்.. ட்விஸ்ட் எல்லாமே இருக்கு.. பொன்மகன் வந்தாள் டிவிட்டர் ரிவ்யூஸ்!

சென்னை: அமேஸான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பதவிட்டு வருகின்றனர்.

ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

எகிறிய எதிர்பார்ப்பு ஏற்கனவே படத்தின் பிரிவியூ பார்த்து இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அட்லி உள்ளிட்டோர் பாராட்டியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் அறிவித்தப்படி இந்தப் படம் நேரடியாக நேற்றிரவு அமேஸான் பிரைமில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

தரமான படம் அமேஸானில் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்த இந்த நெட்டிசன், தரமான படம் கண்டிப்பா பாக்கலாம்.. எமோஷனல், த்ரில்லிங், ட்விஸ்ட்.. எல்லாமே இருக்கு.. ஜோதிகா நடிப்பு சூப்பர் என தம்ப்ஸ் அப் சிம்பளை போட்டு பாராட்டியிருக்கிறார்.

Related posts

Leave a Comment