மும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

மும்பை: 5 மாடி ஹோட்டலில் திடீர் தீ விபத்து.. சிக்கித் தவித்த 25 டாக்டர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மும்பை: தெற்கு மும்பையில் உள்ள ஐந்து மாடி ஹோட்டலில் புதன்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மரைன் லைன்ஸின் தோபி தலாவோ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் பார்ச்சூன் என்ற பிரபல ஹோட்டலில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. “1 வது மரைன் தெருவில் அமைந்துள்ள ஹோட்டலின் முதல் முதல் மூன்றாவது தளங்களில் தீ பரவியது” என்று தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். இது லெவல் -2 வகை தீ விபத்து. குறைந்தது 8 தீயணைப்பு வாகனங்கள் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

தீ மின்சார வயரிங் மற்றும் கேபிள்களிலும், முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் லாபி பகுதியிலும் பரவியுள்ளது. காப்பாற்றப்பட்ட 25 பேரும் மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது

Related posts

Leave a Comment